மாவட்ட செய்திகள்

நீரேற்று நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை அதிகாரிகள் சமரசம்

தஞ்சையில் குடிநீர் வராததை கண்டித்து நீரேற்று நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கணபதி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து மருத்துவகல்லூரி பகுதி, கணபதி நகர் உள்ளிட்ட இடங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள பழைய குழாய்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் 3 நாட்கள் தண்ணீர் வராது என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.