சினிமா துளிகள்

பிரபல பாடலை ரீமிக்ஸ் செய்யும் ராகவா லாரன்ஸ்

ருத்ரன் படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் ராகவா லாரன்ஸ், பிரபல பாடலை ரீமிக்ஸ் செய்து நடித்துள்ளார்.

தினத்தந்தி

பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் தயாரித்து இயக்கும் படம் ருத்ரன். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பலரின் கவனத்தை ஈர்த்த இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில் வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான பாடாத பாட்டெல்லாம் பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார். ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து