தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானவர் ரகுல்பிரீத் சிங். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சூர்யாவுடன் என்.ஜி.கே. படத்தில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசனுடன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாகி உள்ளது. தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தியில் மே டே, தேங்க் காட், டாக்டர் ஜி. ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்து அக்ஷய்குமார் ஜோடியாக புதிய இந்தி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை ரஞ்சித் திவாரி டைரக்டு செய்கிறார். 4 இந்தி படங்களில் நடிப்பதால் ரகுல்பிரீத் சிங் மகிழ்ச்சியில் இருக்கிறார். தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.