நெல்லை,
நெல்லை அருகே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தண்டவாள பராமரிப்பு பணி
நெல்லை அருகே கடம்பூர்வாஞ்சி மணியாச்சிதட்டப்பாறை, வாஞ்சி மணியாச்சிநாரைக்கிணறு கங்கைகொண்டான் ஆகிய பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்பாலக்காடு ரெயில்கள்
திருச்செந்தூர் தூத்துக்குடி பாசஞ்சர் ரெயில் வருகிற 11ந்தேதி (புதன்கிழமை) மட்டும் நெல்லை தூத்துக்குடி வரை ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடி திருச்செந்தூர் இடையில் இருமார்க்கத்திலும் இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்கள் 12ந்தேதி முதல் 15ந்தேதி வரை நெல்லை தூத்துக்குடி இடையே ரத்து செய்யப்படுகிறது.
பாலக்காடுதிருச்செந்தூர் இடையே இருமார்க்கத்திலும் இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்கள் நாளை (வியாழக்கிழமை), 6, 7, 10, 12, 13, 14ந்தேதிகளில் கோவில்பட்டிநெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது.
இதே ரெயில்கள் இன்று (புதன்கிழமை), 8, 11, 15ந்தேதிகளில் நெல்லைமதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இதையொட்டி திருச்செந்தூர்பாலக்காடு பாசஞ்சர் ரெயில் மதுரையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும்.
செங்கோட்டைமதுரை இடையில் இருமார்க்கத்திலும் இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்கள் இன்று முதல் 15ந்தேதி வரை (வியாழக்கிழமை தவிர) விருதுநகர்மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.
நாகர்கோவில்கோயம்புத்தூர் ரெயில்கள்
நாகர்கோவில் கோயம்புத்தூர் நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில்கள் இன்று முதல் 15ந்தேதி வரை திருப்பரங்குன்றம் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி திருவனந்தபுரம்திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 11ந்தேதி முதல் 15ந்தேதி வரை கோவில்பட்டி திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
நாகர்கோவில்தாம்பரம்நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 11ந்தேதி முதல் 15ந்தேதி வரை திண்டுக்கல்நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.
நெல்லைதாதர் ரெயில்
நெல்லை சந்திப்புதாதர் இடையே வாரம் மும்முறை இயக்கப்படும் சாளுக்யா எக்ஸ்பிரஸ் ரெயில் 12, 13ந்தேதிகளில் மாலை 3 மணிக்கு பதில் 4 மணிக்கு புறப்படும்.
நெல்லைஈரோடு/மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் சேலம் கோட்டத்துக்கு 1 மணி நேரம் 55 நிமிடங்கள் தாமதமாக செல்லும். நெல்லைமயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில், திருச்சி கோட்டத்துக்கு குறிப்பிட்ட நாட்கள் 2.15 மணி நேரம் தாமதமாக செல்லும்.
இந்த தகவல்கள் மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.