மாவட்ட செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக நிதி வசூல்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக நிதி வசூல் நடைபெற்றது.

நொய்யல்

கரூர் மேற்கு ஒன்றிய பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. உட்பட இந்து அமைப்புகள் சார்பில் ராமர் கோவில் கட்டுவதற்காக நன்கொடை வசூலிக்கும் பணி தொடங்கியது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு மேற்கொண்டுள்ளது. ராமர் கோவில் கட்டுமானத்தில் அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களிடம், கடை மற்றும் வீடுகளுக்கு சென்று ராமர் கோவில் கட்டுமானம் குறித்து எடுத்துக் கூறி நன்கொடை வசூல் செய்தனர்.