மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்

காரைக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை கோட்டையூர் பகுதியை சேர்ந்த கணேஷ் (வயது 26) என்பவர் ஏமாற்றி திருப்பத்தூர் பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் கணேஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.