நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் பிற மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் வாங்கி வரப்படுகின்றன. அந்த வகையில் நேற்று ஆந்திர மாநிலத்தில் இருந்து 1,675 டன் ரேஷன் அரிசி சரக்கு ரெயிலில் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து 80 லாரிகளில் ஏற்றி என்.புதுப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு செந்தமான குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கோழித்தீவனத்திற்கு தேவையான தவிடு 1,300 டன் சரக்கு ரெயிலில் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டன. இவை 55 லாரிகளில் ஏற்றப்பட்டு கோழிப்பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.