மாவட்ட செய்திகள்

நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் ரேஷன் அரிசி வந்தது

நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் ரேஷன் அரிசி வந்தது

நாமக்கல்:

இந்திய உணவு கழகத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு ரெயிலில் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது. அவை அனைத்தும் 140 லாரிகளில் ஏற்றப்பட்டு நாமக்கல்லில் உள்ள திருச்செங்கோடு சாலையில் இருக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கும், புதுப்பட்டியில் உள்ள இந்திய உணவு கழகத்தின் சேமிப்பு கிடங்கிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் டவுன் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.