சினிமா துளிகள்

சர்வதேச திரைப்பட விழாவில் ‘கர்ணன்’ படத்துக்கு கிடைத்த அங்கீகாரம்

பெங்களூரில் நடைபெற்ற இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டது.

தினத்தந்தி

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். மேலும் யோகிபாபு, கௌரி கிஷன், லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக் குவித்தது. இப்படம் தற்போது தெலுங்கு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெங்களூரில் நடைபெற்ற இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக கர்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கட்டில் திரைப்படம் பெற்றது. இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. இந்த விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து