சினிமா துளிகள்

சாய் பல்லவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே களி என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். பின்னர் பிடா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்கு சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான தியா படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்காராய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர் நடிப்பில் விராட பர்வம் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரிலீசாக தயாராகி உள்ளது. ராணா டகுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இதன் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சாய் பல்லவியின் பிறந்த நாளான இன்று படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விராட பர்வம் வருகிற ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்து, அதனுடன் படத்தில் இடம்பெற்றுள்ள சோல் அஃப் வெண்ணிலா என்ற பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து