புதுச்சேரி

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வில்லியனூர் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி

வில்லியனூர்

வில்லியனூர் அருகே உள்ள கோட்டைமேட்டில் ஓதியம்பட்டு, புதுச்சேரி - விழுப்புரம் சாலை சந்திப்பு பகுதியில் மழை காலங்களில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் ஆக்கிரமிப்பால் இந்த நிலை ஏற்படுகிறது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் கழிவுநீர் வாய்க்காலை புதிதாக கட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதையொட்டி சாலையோரம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை தாமாக அகற்றிக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவித்தனர்.

அதன்பேரில் கடைகள், வீடுகளில் இருந்த பொருட்களை பொதுமக்கள் தாங்களாகவே அகற்றிக்கொண்டனர். கட்டிட ஆக்கிரமிப்புகள் மட்டும் அகற்றப்படாமல் இருந்தது. இந்த கட்டிடங்களை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் நேற்று இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்