மும்பை,
மும்பை கிர்காவ் நாவால்கர் ரோடு பகுதியில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் விபசாரம் நடந்து வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் அங்கிருந்த 33 பெண்களை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. இவர்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஏஜெண்ட், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என சேர்த்து 23 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.