சினிமா துளிகள்

மீண்டும் இணையும் ‘அண்ணாத்த’ கூட்டணி?

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது.

தினத்தந்தி

தமிழ், தெலுங்கில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம்வந்த சிவா, கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இதையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ள இயக்குனர் சிவா, இப்படத்தை முடித்த பின்னர், மீண்டும் ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்