மாவட்ட செய்திகள்

நெல்லையில் வருவாய்த்துறை சங்கத்தினர் சாலை மறியல்: 153 பேர் கைது

நெல்லை வண்ணார்பேட்டையில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகே வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

வண்ணார்பேட்டையில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் சுப்பு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது வருவாய்த்துறை ஊழியர்கள் கோரிக்கைகளை வலயுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள சாலையில் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் மறியலில் ஈடுபட்ட 153 பேரை கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபத்தில் வைத்தனர்.