புதுச்சேரி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால்

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியும், பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து, சாலை பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி, சாலை விதிகளை கடைபிடிப்பதன் அவசியம், போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்.

மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரி கல்விமாறன், காரைக்காலில் போக்குவரத்து விதிமீறல்களை குறைக்க போலீசார் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர். விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் குமார், ஆசிரியர் சங்க தலைவர் வின்சென்ட், பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளர் ரவிச்சந்திரன், நெல்சன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்