புதுச்சேரி

முள்ளோடை நுழைவு வாயிலில் பா.ம.க.வினர் சாலைமறியல்

அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து முள்ளோடை நுழைவு வாயிலில் பா.ம.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பாகூர்,

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் விரிவாக்கத்துக்காக நெற்பயிர்களை அழித்து கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. இதை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

இதனை கண்டித்து கடலூர் சாலையில் உள்ள முள்ளோடை நுழைவுவாயிலில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மதிகிருஷ்ணாபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜாராம், பட்டாபிராமர் கோவில் அரங்காவல் குழு தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் கிராம பஞ்சாயத்து துணை தலைவர் ராமச்சந்திரன், வன்னியர் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசங்கர், தொகுதி தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கிருமாம்பாக்கம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த மறியலால் புதுவை- கடலூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து