புளியங்குடி:
புளியங்குடி டி.என்.புதுக்குடி சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் சுப்பிரமணியன் (வயது 27). இவர் அரியநாயகிபுரம் தபால் நிலையத்தில் தபால்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதற்காக வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை எடுத்து, வீட்டில் உள்ள மேஜையில் வைத்து விட்டு, காற்றுக்காக வீட்டின் முன் பக்க கதவையும் திறந்து வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மேஜையில் வைத்திருந்த பணத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.