சினிமா துளிகள்

சல்மான்கானை பின்னால் தள்ளினார், ஷாகித் கபூர்!

இந்தி பட உலகில் பிரபல கதாநாயகர்களின் படங்களுக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு இருந்து வருகிறது.

வெளிநாடுகளிலும் இந்தி படங்கள் நல்ல வசூல் செய்து வருகின்றன. இந்தி படங்கள் ரூ.100 கோடி வசூல் செய்வது, மிக சாதாரணமாகி விட்டது.

இந்த ஆண்டில் இதுவரை வந்த இந்தி படங்களில், அதிக வசூல் செய்த படம், விக்கி கவுசல் நடித்த யுரி படம்தான். இதையடுத்து ஷாகித் கபூர் நடித்து சமீபத்தில் வெளிவந்த கபீர்சிங் படம், வசூல் அடிப்படையில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது.

மூன்றாவது இடத்தில் சல்மான்கானின் பாரத் படமும், 4-வது இடத்தில் அக்ஷய்குமார் நடித்த கேசரி படமும், 5-வது இடத்தில், தமால் என்ற படமும் உள்ளன. ஷாகித் கபூர் நடித்த கபீர்சிங் படம் திரைக்கு வந்த 14 நாட்களில், ரூ.213 கோடியை தாண்டி வசூல் செய்து, சல்மான்கானின் பாரத் படத்தை பின்னுக்கு தள்ளிவிட்டது!

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை