சினிமா துளிகள்

சமந்தாவின் புதிய தோற்றம்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை சமந்தாவின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் சாகுந்தலம். சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி பாலன், அனன்யா நாகள்ளா, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி, மதுபாலா போன்ற பல முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். சாய் மாதவ் வசனங்கள் எழுத, குணசேகர் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். நீலிமா குணாவும், தில் ராஜுவும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தை தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சாகுந்தலையாக சமந்தா நடித்திருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அனைவரின் கவனத்தை ஈர்த்த இப்படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது நடிகை சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல் ரெண்டு காதல் படம் வெளியாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்