மாவட்ட செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு தடை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தமிழக அரசின் உத்தரவின் பேரில் இந்த கோவில் நேற்று மூடப்பட்டது. மேலும் விடுமுறை நாளான இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோவில் மூடப்பட்டு இருக்கும். சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலின் கீழ் உள்ள 30 உப கோவில்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.