திருநள்ளாறு
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு திரைப்பட பின்னணி பாடகர் மனோ இன்று வந்தார். அங்கு அவர் சனீஸ்வர பகவானை பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பின்னர் அவர் மரியாதை நிமித்தம் கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து பேசினார்.
அப்போது, காரைக்காலில் நடைபெறும் கார்னிவெல் உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் கலந்துகொள்ள வருமாறு மனோவுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்தார். தாசில்தார் செல்லமுத்து மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.