மாவட்ட செய்திகள்

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

கமுதி,

கமுதி அருகே எஸ்.புதுபட்டி கிராமத்தை சேர்ந்த ராஜபெருமாள் (31) ஒத்தபுளி கண்மாய் பகுதியில் அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் அள்ளி கடத்தி உள்ளார். அப்போது ரோந்து சென்ற தனிப்பிரிவு போலீசார் முருகபூபதி மற்றும் ஹலோ போலீஸ் கார்த்தி ஆகியோர் அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.