மாவட்ட செய்திகள்

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

ஆவூர்
மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆவூர் அருகே உள்ள கோரையாற்றுப்பகுதியில் இருந்து வந்த ஒரு மாட்டுவண்டியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் கோரையாற்றிலிருந்து மணல் அள்ளி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணல் கடத்திய ஜான் (வயது 40) என்பவரை கைது செய்த போலீசார் மணலுடன் மாட்டுவண்டியையும் பறிமுதல் செய்தனர்.