திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் பீமன்தோப்பு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு மாட்டு வண்டியை கைப்பற்றி மாட்டு வண்டியை ஓட்டி வந்த ஈக்காடு கிராமத்தை சேர்ந்த பூபதி (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.