அன்னூர்
கோவை அன்னூர் அருகே உள்ள குன்னத்தூர் புதூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே அரசு நிலம் உள்ளது.
இங்கு சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் திருடுவதாக தகவலறிந்த பாதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது அங்கு சிலர் பொக்லைன் எந்திரத்துடன் மணலை திருடி லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
உடனே பொது மக்கள் அவர்களையும், லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தையும் சிறைபிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர்.