மும்பை

நீதிபதிகள் குறித்த மத்திய சட்டத்துறை மந்திரியின் கருத்து நீதித்துறையை அச்சுறுத்தும் முயற்சி- சஞ்சய் ராவத் எம்.பி. குற்றச்சாட்டு

ஓய்வு பெற்ற நீதிபதிகள் குறித்த மத்திய சட்டத்துறை மந்திரியின் கருத்து, நீதித்துறையை அச்சுறுத்தும் முயற்சி என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

மும்பை, 

ஓய்வு பெற்ற நீதிபதிகள் குறித்த மத்திய சட்டத்துறை மந்திரியின் கருத்து, நீதித்துறையை அச்சுறுத்தும் முயற்சி என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

மத்திய மந்தி கருத்து

மத்திய சட்டத்துறை மந்திரி கிரன் ரிஜ்ஜு நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த தனியார் பத்திரிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய அவர், தேசவிரோத கும்பலை சேர்ந்த சில ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஆர்வலர்கள் இந்திய நீதித்துறை எதிர்க்கட்சிகளின் வேலையை செய்ய வைக்க முயற்சி செய்கின்றனர் என்றார்.

அச்சுறுத்தும் முயற்சி

மத்திய மந்திரியின் கருத்து குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-

என்ன வகையான ஜனநாயகம் இது?. சட்டத்துறை மந்திரி நீதித்துறையை மிரட்டுவது அழகா?. மத்திய அரசுக்கு அடிபணியாத நீதிபதிகளுக்கான மிரட்டல் அது. நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும், அச்சுறுத்தும் முயற்சி. அரசை விமர்சிப்பதால் அவர் தேசத்துக்கு எதிரானவர் என்று அர்த்தம் அல்ல. நாட்டில் ஜனநாயகத்துக்கு நிலவும் அச்சுறுத்தல் குறித்து ராகுல் காந்தி பேசி உள்ளார். அவரை நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கான நகர்வுகள் நடக்கின்றன.

ராகுல் காந்தி தான் பேசிய விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்க மாட்டார். பா.ஜனதா தலைவர்கள் தான் நாட்டுக்கு எதிராக பேசுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.