சினிமா துளிகள்

பத்மஸ்ரீ விருதும் பெறும் சவுகார் ஜானகி

சினிமா உலகில் 400 படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெருமைக்குரிய செயல்களை செய்தவர்கள், சிறந்த சேவை செய்தவர்கள், சாதனை நிகழ்த்தியவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. தற்போது 2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்மவிபூஷன் 4 பேருக்கும், பத்மபூஷன் 17 பேருக்கும், பத்மஸ்ரீ 107 பேருக்கும் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில் பத்ம ஸ்ரீ விருது பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி பெயரை அறிவித்து இருக்கிறார்கள். நடிகை சவுகார் ஜானகி தமிழில் 1952ஆம் ஆண்டு வளையாபதி என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான பிஸ்கோத் என்ற திரைப்படம் சவுகார் ஜானகியின் 400வது படமாகும்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்