திண்டுக்கல்:
திண்டுக்கல்லை அடுத்த மறவப்பட்டியை சேர்ந்தவர் ஹெலன் ஹில்டா (வயது 41). அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்தார். நேற்று இவர், தனது மகன் ஹெலன் தீபக்குடன் (22) மோட்டார் சைக்கிளில் கொசவப்பட்டியில் வசிக்கும் தந்தை வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். மோட்டார்சைக்கிளை ஹெலன் தீபக் ஓட்டினார்.
திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி. காலனி அருகே வந்த போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள், இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஹெலன் ஹில்டா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.