திருப்பரங்குன்றம்
மதுரை திருநகரில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையே அந்த சிறுமிக்கு 2 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருப்பினும் அந்த சிறுமி பள்ளி படிப்பை தொடர்ந்துள்ளார். அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனால் நேற்று பள்ளிக்கு செல்லவில்லை. இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணை
பின்னர் வேலைக்கு சென்று திரும்பிய அவரது தாயார், மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருநகர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.