பெரம்பலூர்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. கண்காட்சியை பொறுப்பு கலெக்டரும், மாவட்ட வருவாய் அலுவலருமான நா.அங்கையற்கண்ணி தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் உணவு பொருட்கள், நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களின் உலகம், நகரும் பொருட்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் 150-க்கும் மேற்பட்ட படைப்புகள் மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், கல்வி அலுவலர்கள் சண்முகம் (பெரம்பலூர்), ஜெகநாதன்(வேப்பூர்), மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன், பள்ளி முதல்வர் சாந்தி பன்னீர்செல்வம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.