மாவட்ட செய்திகள்

கரூர் மாநகராட்சிக்கு நிலுவைத்தொகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

கரூர் மாநகராட்சிக்கு நிலுவைத்தொகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

கரூர்,

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான இனாம் கரூர் வணிக வளாகம் மற்றும் ஆசாத் ரோடு வணிக வளாகம் மற்றும் வெங்கமேடு மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் மாநகராட்சிக்கு நிலுவை வரித்தொகை செலுத்தாத கடைகளை நேற்று மதியம் 12 மணியளவில் வருவாய் அலுவலர் பாஸ்கரன், முன்னிலையில் வருவாய் ஆய்வாளர்கள் ரகுபதி, குழந்தைவேல் ஆகியோரால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவைகள் உடனடியாக செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறது என கரூர் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.