மாவட்ட செய்திகள்

உணவு பாதுகாப்பு தின கருத்தரங்கம்

உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.

இளையான்குடி,

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் உலக உணவு பாதுகாப்பு தின இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கில் இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கியத்தின் அஸ்திவாரம், சைவ உணவு, அசைவ உணவு என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் 32 பேர் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை பரிமாற்றம் செய்தனர். கருத்தரங்கை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களான பேராசிரியர்கள் அஸ்மத்து பாத்திமா, அப்ரோஸ், பீர் முகமது, சையது யூசுப் ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள்.