மாவட்ட செய்திகள்

கருத்தரங்கம்

அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

காரைக்குடி,

அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் உள்தர மதிப்பீட்டுக்குழுவின் சார்பாக கல்லூரியின் உமையாள் அரங்கில் தேசியத்தர மதிப்பீட்டுக்கு தயாராவது எப்படி? என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் பெத்தாலெட்சுமி தலைமை வகித்தார். கல்லூரியின் உள் தர மதிப்பீட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜெயசாலா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மாணிக்க வாசகம் கல்லூரிகளின் தேசிய தர மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்றும் அதற்குத் தயாராகும் முறைகள் குறித்தும் பேராசிரியர்கள் இடையே விளக்கி பேசினார். முடிவில் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.இதில் கல்லூரியில் பணிபுரியும் அனைத்து பேராசிரியர்களும் பங்கேற்றனர். பேராசிரியர் ராஜன்கணபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.