மாவட்ட செய்திகள்

இண்டூர் அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கல்லூரி மாணவர் கைது

இண்டூர் அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

பாப்பாரப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் இண்டூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்து மாணவி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இண்டூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதகபாடி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர், மாணவியை திருப்பூருக்கு கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மாணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.