சினிமா துளிகள்

விஜய் சேதுபதி படத்தில் ஷிவானி - உறுதிப்படுத்திய புகைப்படம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி பிறகு படங்களில் நடிக்க துவங்கியிருக்கும் ஷிவானி தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் பகிர்ந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.

நடிகை ஷிவானி இயக்குனர் பொன்ராமுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அதில் சிறந்த இயக்குனருடன் பணிபுரிவது பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவரையும் இது எந்த திரைப்படமாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதனை குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று தெரிகிறது.

தற்போது பொன்ராம் விஜய் சேதுபதியை வைத்து விஜேஎஸ்46 படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...