மாவட்ட செய்திகள்

வடசித்தூர் வாய்க்காலில் புதர்களை அகற்றும் பணி

வடசித்தூர் வாய்க்காலில் புதர்களை அகற்றும் பணி

நெகமம்

பி.ஏ.பி. பாசன திட்டத்தில் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வடசித்தூர் கிளை வாய்க்கால் மூலம் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது.

இந்த வாய்க்காலில் அடுத்த வாரம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதை யொட்டி பாசன விவசாயிகள் சார்பில் ஜக்கார்பாளையம் முதல் வெட்டுவாவி வரை 14 கி.மீ. தூரம் இந்த வாய்க்காலின் இருபுறத்திலும் புதர்களை வெட்டி அகற்றும் பணி தொடங்கியது.

வாய்க்காலில் உள்ள புதர்களும் அகற்றப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.