சினிமா துளிகள்

காந்தி பிறந்தநாளில் விருந்து கொடுக்கும் சிம்பு

பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் சிலம்பரசன், காந்தி ஜெயந்தி தினத்தில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருக்கிறார்.

தினத்தந்தி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார்.

மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், தற்போது மாநாடு படத்தின் டிரைலரை காந்தி ஜெயந்தி தினத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு