சினிமா துளிகள்

தெலுங்கில் ‘வருண் டாக்டர்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இளம் நடிகை பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய், அர்ச்சனா, காளி வெங்கட், தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். டாக்டர் படத்தின் தெலுங்கு டப்பிங்கிற்கு வருண் டாக்டர் என பெயரிட்டுள்ளனர்.

இப்படம் தமிழில் வெளியாகும் அதே நாளில் தான் தெலுங்கிலும் வெளியிட உள்ளார்களாம். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, சீமராஜா, ஹீரோ ஆகிய படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்