இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், 'பிரின்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் அறிவித்தபடி, 'பிரின்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடலான பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் வைரலாக்கி வருகின்றனர்.