சினிமா துளிகள்

மிஷ்கின் உடன் கூட்டணி அமைக்கும் எஸ்.ஜே.சூர்யா?

பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ள மிஷ்கின், அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மிஷ்கின் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இயக்க உள்ள புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிசாசு 2 படத்தை தயாரித்த முருகானந்தம் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளாராம். மேலும் இப்படத்தில் நடிகர் வித்தார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்