ஆட்டோமொபைல்

ஸ்கோடா ஸ்லாவியா மேட் எடிஷன்

சொகுசுக் கார்களைத் தயாரிக்கும் செக்கோஸ் லோவோகியா நாட்டைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் தனது ஸ்லாவியா மாடல் கார்களில் மேட் எடிஷனை எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

கார்பன் ஸ்டீல் பெயிண்ட் மேட் பினிஷ் முறையில் பூசப்பட்டு அழகுற காட்சி தருகிறது. இதில் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. 3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இதில் மேனுவல் கியர் மாடல் 6 கியர்களுடனும், ஆட்டோமேடிக் மாடல் 7 கியர்களைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லிட்டர் என்ஜின் மாடல் 114 பி.ஹெச்.பி. திறனையும், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். 1.5 லிட்டர் மாடல் 4 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. இது 150 பி.ஹெச்.பி. திறனையும், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதன் விலை சுமார் ரூ.15.52 லட்சம் முதல் சுமார் ரூ.19.12 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு