பெங்களூரு

மருந்து உற்பத்தி துறை வளர்ச்சிக்கு திடமான கொள்கை- மந்திரி சுதாகர் பேட்டி

மருந்து உற்பத்தி துறை வளர்ச்சிக்கு திடமான கொள்கை தேவைப்படுகிறது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு:

மருந்து நிறுவனங்கள் மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பெங்களூருவில் சுகாதாரத்துறையில் மருந்து உற்பத்தி தொடர்பாக 2,300 புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்கள் உள்ளன. மாநிலத்தில் 12 ஆயிரம் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மருந்து துறையின் முழுமையான வளர்ச்சிக்கு ஒரு திடமான கொள்கை தேவைப்படுகிறது. கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் மருந்தாளுனர் படிப்பு முடித்தவர்கள் உள்ளனர்.

பொதுவான மருந்துகள் உற்பத்தியில் இந்தியா இன்னும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. மருந்துகள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 1.5 சதவீதமாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த அளவை மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நமது மருந்து தேவையில் 1.5 சதவீதம் மட்டுமே நாம் உற்பத்தி செய்தோம். ஆனால் அது தற்போது 85 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு சுதாகர் பேசினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்