சினிமா துளிகள்

சமீப கால படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை - வெப் தொடர் இசையமைப்பாளர்

சமீப கால படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று ‘பேப்பர் ராக்கெட்’ வெப் தொடர் இசையமைப்பாளர் சைமன் கே.கிங் கூறுகிறார்.

தினத்தந்தி

சமீபகாலத்தில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட வெப் தொடர் கிருத்திகா உதயநிதி இயக்கிய 'பேப்பர் ராக்கெட்'. இந்த தொடருக்கு தனது இசையால் மெருகூட்டியவர் சைமன் கே.கிங். பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக பொதுமக்களிடம் இருந்து பாராட்டுகளையும், அன்பையும் பெற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறுகிறார்:-

"பேப்பர் ராக்கெட் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன், பரவலான பார்வையாளர்களையும் சென்றடைந்துள்ளது. ரம்யா நம்பீசன் பாடிய 'சேர நாடு' என்ற தமிழ், மலையாள பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்துக்கும் நான்தான் இசையமைப்பாளர். சமீபகால திரைப்படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை. ஆனால் கிருத்திகா உதயநிதி இயக்கும் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அவர் இயக்கும் படங்களில் பணிபுரிவது மகிழ்ச்சியாக இருக்கிறது."

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு