கரூர் 
மாவட்ட செய்திகள்

அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையத்தில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பச்சை நிற பட்டு உடுத்தி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.

நொய்யல் அருகே முனிநாதபுரத்தில் உள்ள முனியப்ப சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்கள் மற்றும் எலுமிச்சை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் புன்னம் சத்திரம் அருகே உள்ள கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.