பெங்களூரு

ஆண்டர்சன்பேட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி ஆண்டர்சன்பேட்டையில் உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

தினத்தந்தி

கோலார் தங்கவயல்

கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை எம்.பி. சாலையில் 175 ஆண்டு பழமையான ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அதன்படி தினமும் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். குறிப்பாக சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். இந்தநிலையில் நேற்று 4-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. அதாவது கோவிலில் உள்ள பெருமாள் மட்டுமின்றி லட்சுமி தேவி, பூமா தேவிக்கு பல்வேறு வகையான அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன.

இதை தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்