கரூர் 
மாவட்ட செய்திகள்

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையத்தை அடுத்த தளவாப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு புனிதநீரால் நீராடப்பட்டு, பால்,

தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள் நிற பட்டு உடுத்தி, மலர்களால் அலங்காரம்

செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதன காண்பிக்கப்பட்டது. இதேபோல் நாணப்பரப்பு மாரியம்மன், வேலாயுதம்பாளையம் மகா மரியம்மன், கடம்பங்குறிச்சி மாரியம்மன், மண்மங்கலம் புதுகாளியம்மன் ஆகிய கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.