ராமர் கோவில் ஸ்பெஷல்

அயோத்தி: சிறப்பு வானிலை ஆய்வு மையம் தொடக்கம்

6 மொழிகளில் அயோத்தியின் வானிலை நிலவரம் குறித்து வெளியிடப்படுகிறது.

தினத்தந்தி

அயோத்தி,

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அயோத்திக்கென சிறப்பு வானிலை இணையதளத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தொடங்கி உள்ளது.

அயோத்தி மற்றும் அதன் அருகில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பற்றிய வானிலை நிலவரங்களை மட்டும் சிறப்பாக எடுத்துரைக்கும் வகையில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த இணையதளத்தில் அயோத்தி, பிரயாக்ராஜ், வாராணசி, லக்னோ, புதுடெல்லி உள்ளிட்ட பகுதிகளின் வானிலை நிலவரங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அந்தப் பகுதியின் வெப்பநிலை, புழுக்கம், காற்றின் திசை, காற்றின் வேகம், மழைப்பொழிவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெள்ளத்தெளிவாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் அம்சமாக, உலகம் முழுவதும் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளான இந்தி, ஆங்கிலம், உருது, சீனம், பிரெஞ்ச், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஏழு நாள்களுக்கான வானிலை நிலவரமும், சூரிய உதயம், சூரியன் மறையும் நேரங்களும் இந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வழங்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்