ராமர் கோவில் ஸ்பெஷல்

ராமர் கோவில் திறப்பு.. 10 லட்சம் விளக்குகளால் ஜொலிக்கப்போகும் அயோத்தி

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ராமர் கோவிலின் திறப்பு விழாவை தொடர்ந்து, நாளை இரவு 10 லட்சம் விளக்குகளால் அயோத்தி ஜொலிக்க உள்ளது. மேலும் அரசின் அழைப்பின் பேரில் அயோத்தியில் உள்ள வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் என அனைத்து இடங்களிலும் "ராம் ஜோதி" விளக்கேற்றப்படும் . 

செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலன்..ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்

இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்

மும்பை விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசல்; பெரும் விபத்து தவிர்ப்பு

மூணாறில் இருந்து திருவனந்தபுரம், கோழிக்கோடுக்கு புதிய பஸ் சேவை

பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொன்ற கொடூர தந்தை கைது