மத்திய பட்ஜெட் - 2022

பொருளாதார ஆய்வறிக்கை மாநிலங்களவையிலும் தாக்கல்

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலயில், பொருளாதார ஆய்வறிக்கையை இன்று பாராளுமன்ற மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து பேசினார். இதையடுத்து, மாநிலங்களவையிலும் பொருளாதார ஆய்வறிக்கையின் நகல் தாக்கல் செய்யப்பட்டது.

மாநிலங்களவை இன்று காலை கூடியதும் மறைந்த முன்னாள் எம்.பிக்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதையடுத்து, பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். முன்னதாக அவை கூடியதும், உறுப்பினர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வேண்டும் என்று அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து