காமன்வெல்த்-2022

காமன்வெல்த்: குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சாகர் வெள்ளிப்பதக்கம் வென்றார்

காமன்வெல்த்தின் குத்துச்சண்டை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகர் இங்கிலாந்தின் டீலிசியஸ் ஓரியிடம் தோல்வியுற்று வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

தினத்தந்தி

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த்தில் இந்தியா இதுவரை 18 தங்கம், 14 வெள்ளி, 22 வெண்கலம் என 54 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஆண்களுக்கான (92 கிலோவுக்கு மேல்) குத்துச்சண்டை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகர் இங்கிலாந்தின் டீலிசியஸ் ஓரியை சந்தித்தார். இந்தப் போட்டியில் சாகர் 0-5 என்ற கணக்கில் இங்கிலாந்தின் டீலிசியஸ் ஓரியிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்த பதக்கத்தின் மூலம் இந்தியாவின் பதக்க் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்து உள்ளது. இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு